நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி. தொடர்ந்து வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள், ராஜா ராணி ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் 2021ம் ஆண்டில் திருமணம் செய்துவிட்டு கணவருடன் துபாயிலேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கீர்த்தி ராஜ் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.