தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் |

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 45வது படத்திற்கு இசையமைக்க இருந்த ஏ.ஆர்.ரஹ்மான், அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் பென்ஸ் படத்திற்கு இசையமைக்கும் பாடகர் திப்பு - பாடகி ஹரிணியின் மகனான சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்திற்கும் சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.
மமிதா பைஜூ நாயகியாக நடிக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் கார்த்தீஸ்வரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கும் கமிட்டாகி கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ளார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.