புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
பரத் நடிப்பில் நாளை மறுநாள் வெளிவர இருக்கும் படம் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்'. இந்த படத்தில் பரத்துடன் அபிராமி, கனிகா, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது ஹெபர் லிங் ஜார்னரில் தயாராகி உள்ள கிரைம் திரில்லர் படம். பிரசாத் முருகன் இயக்கி உள்ளார். பிரைடே பிலிம் பேக்டரி சார்பில் எம்.பி.ஆனந்த் தயாரித்துள்ளார்.
படத்தின் முன் திரையீடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பேசிய மற்றுமொரு தயாரிப்பாளரான ஹாரூன் பேசும்போது “இந்த படத்திற்கு நாங்கள் தணிக்கைக்கு சென்றபோது 'யுஏ' சான்றிதழ் தருவார்கள் என்று நம்பினோம். காரணம் கதை கிரைம் திரில்லராக இருந்தாலும் பார் காட்சிகளோ ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளோ, பாலியல் வன்முறை காட்சிகளோ இல்லை. ஆனால் படத்தை பார்த்து விட்டு 20 நிமிட காட்சிகளை நீக்கினால் 'யுஏ' தருகிறோம் என்றார்கள். அவர்கள் சொன்ன காட்சிகள் படத்தின் கதைக்கு மிக முக்கியமானவை. என்றாலும் நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டு கதை பாதிக்காதவாறு காட்சிகளை நீக்கினோம். அப்படி இருந்தும் 'ஏ' சான்றிதழ்தான் கொடுத்தார்கள்.
இதுகுறித்து எங்களை விவாதம் செய்யக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. உத்தரவுதான் போட்டார்கள். சமீபத்தில் மனிதர்களை துண்டு துண்டாக வெட்டும் காட்சிகள் கொண்ட படங்கள்கூட 'யுஏ' சான்றிதழுடன் வெளிவந்தது. மேல் முறையீட்டுக்கு செல்லவோ, நீதிமன்றம் செல்லவோ எங்களுக்கு சக்தியும் இல்லை, நேரமும் இல்லை. இதுவே பெரிய நடிகர்கள் நடித்த பெரிய படம் என்றால் இப்படி செய்வார்களா?” என்றார்.