புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
1999ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி வெளிவந்த 'சேது' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. அவர் இயக்குனராகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு அவர் அடுத்து இயக்கியுள்ள 'வணங்கான்' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்த வாரம் டிசம்பர் 18ம் தேதி சென்னையில் பாலாவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த உள்ளார்.
அதற்காக இயக்குனர்கள் ஆர்கே.செல்வமணி, லிங்குசாமி, மிஷ்கின், சமுத்திரகனி, ராம், ஏஎல் விஜய், 'வணங்கான்' படத்தின் நாயகன் அருண் விஜய் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளார் தயாரிப்பாளர். அந்த பாராட்டு விழழவில் பாலா படத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய இதர கலைஞர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்க உள்ளார்கள்.
இயக்குனர் பாலாவின் முதல் படமான 'சேது' படத்தின் கதாநாயகன் விக்ரம், இரண்டாவது படமான 'நந்தா' படத்தின் கதாநாயகன் சூர்யா ஆகியோர் அந்தப் படங்களுக்குப் பிறகுதான் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்தார்கள். பாலா இயக்கிய 'பிதாமகன்' படம் விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது. ஆனால், அவர்கள் இருவருமே தற்போது பாலாவுடன் நல்ல உறவில் இல்லை.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான 'ஆதித்ய வர்மா' படம் காரணமாக இயக்குனர் பாலாவுக்கும் விக்ரமுக்கும் சண்டை ஏற்பட்டது. அடுத்து 'வணங்கான்' படத்தில் சூர்யா தயாரித்து, நடிக்க ஆரம்பித்து விலகினார். அந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, அருண் விஜய் நடிக்க முடித்தார்கள்.
பாலாவிற்கு பாராட்டு விழா என்றால் விக்ரம், சூர்யா இருவரது வருகை இல்லாமல் முழுமையடையாது. பகையை மறந்து அவர்கள் இருவரும் இந்த விழாவில் பங்கேற்பார்களா ?, அவர்களுக்கு விழாக்குழுவினர் தவறாமல் அழைப்பு விடுத்து, பங்கேற்றாக வேண்டும் என வலியுறுத்துவார்களா ? என்பது விரைவில் தெரிய வரும்.