மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மோகன் பாபு. நடிகர் ரஜினிகாந்த்தின் நீண்ட கால நெருங்கிய நண்பர். மோகன் பாபுவுக்கு லட்சுமி, விஷ்ணு, மனோஜ் என ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். மூவருமே தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக மோகன் பாபு குடும்பத்தில் சொத்து தகராறு நடந்து வருவதாகத் தகவல். திருப்பதியில் பள்ளி, கல்லூரி ஆகியவற்றை நடத்தி வருகிறார் மோகன் பாபு. அது மட்டுமல்லாமல் திருப்பதி, ஐதராபாத் ஆகிய இடங்களில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறது.
நேற்று காலை மனோஜ் அவரது அப்பா மீது புகார் தெரிவித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் மருத்துவமனைக்குச் சென்று தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு மனோஜ் சிகிச்சை மேற்கொண்டார். மகன் மீது மோகன் பாபுவும் புகார் அளித்தார் என்றும் தெரிகிறது. ஆனால், இது தவறான செய்தி என மோகன் பாபு குடும்பம் சார்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த வருடம் மனோஜும், அவரது அண்ணன் விஷ்ணுவும் சண்டை போட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. புமா மவுனிகா என்ற பெண்ணை மனோஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது அவரது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. அதிலிருந்தே மனோஜுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே சண்டை நிலவி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.