ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா 70 எம்எம் தியேட்டரில் பிரிமியர் காட்சி திரையிட்ட போது கூட்ட நெரிசலில் 39 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவருடைய 13 வயது மகன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த அகால மரணத்தைத் தொடர்ந்து சிக்கடபள்ளி போலீசார் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த பிரிமியர் காட்சியில் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்த போதுதான் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர் அங்கு வருவது குறித்து காவல் துறைக்கு தியேட்டர் நிர்வாகம் எந்தவிதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அவ்வளவு கூட்டம் கூடுவதற்கு எந்த வித பாதுகாப்பும் செய்யப்படவில்லை என்றும் தெரிகிறது.
வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று சந்தியா தியேட்டரின் உரிமையாளர், மேலாளர், பாதுகாப்பு மேலாளர் ஆகியோரை சிக்கடபள்ளி போலீசார் கைது செய்தனர்.
உயிரிழந்த பெண்ணுக்கு அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தார். அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அவரும் கைது செய்யப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.