கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மணிப்பூர் வன்முறையை மையமாக வைத்து ஹிந்தியில் ‛தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற பெயரில் படம் தயாராகிறது. சனோஜ் மிஸ்ரா இயக்கும் இப்படத்தின் மூலம் நடிகர் ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். படத்தின் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் சனோஜ் மிஸ்ரா கூறுகையில், ‛‛இந்த படம் அரசியல்வாதிக்கும், ஏழை கிராமத்து பெண்ணுக்கும் இடையிலான காதல் கதையை மையமாக கொண்டது. மணிப்பூரின் வன்முறையையும் இப்படம் கடந்து செல்கிறது. மிகவும் சென்சிட்டிவான தலைப்பு என்பதால் படத்தின் கதை பற்றி இப்போது விரிவாக சொல்ல முடியாது'' என்றார்.
நடிகர் அமித் ராவ் கூறுகையில், ‛‛நீண்ட நாட்களாக பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்தின் கதையை இயக்குனர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் சொன்னபோது இந்தப் படத்தில் நடிக்காமல் இருக்க முடியவில்லை, உடனே சம்மதித்தேன். பாலிவுட்டில் எனது அறிமுகத்திற்கு இதுவே நல்ல நேரம் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் நடிப்பின் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்'' என்றார்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.