டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? |
பிரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் எம்.ஷோபனா ராணி தயாரிக்கும் படம் ஒர்க்கர். ஜெய், யோகி பாபு, ரீஷ்மா நனையா, நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசிலயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வினய் கிருஷ்ணா இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது “உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதை, ரசிகர்களை கவரும் தருணங்களால் "ஒர்க்கர்" திரைப்படம் நிறைந்திருக்கும். புதுச்சேரியில் இதன் படப்பிடிப்புகள் நடக்கிறது'' என்றார்.
இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும ரீஷ்மா நனையா கன்னடத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. 'ஏக் லவ் யா' என்ற படத்தில் அறிமுகமாகி ராணா, ஸ்பூக்கி காலேஜ், வாமனா, கேடி தி டெவில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 'ஒர்க்கர்' படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.