ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா 2' படம் நேற்று முன்தினம் உலக அளவில் வெளியானது. தெலுங்கில் உருவான படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி உலகம் முழுவதும் வெளியானது.
தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியாவது பல வருடங்களாக நடந்து வருகிறது. 'பாகுபலி 2' படத்திற்குப் பின் மற்ற தென்னிந்திய மொழிகளான கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது.
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி, தேவரா' ஆகிய படங்கள் புரியாத முதல் நாள் வசூல் சாதனையை தற்போது 'புஷ்பா 2' படம் புரிந்துள்ளது. தமிழகத்தில் முதல் நாள் வசூலாக 11 கோடியும், கர்நாடகாவில் 23 கோடியும், கேரளாவில் 6 கோடியுமாக வசூலித்துள்ளது. இதுவரை வெளியான எந்த ஒரு தெலுங்குப் படத்திற்கும் கிடைக்காத முதல் நாள் வசூல் இது என அதிகாரப்பூர்மாக வெளியிட்டுள்ளார்கள். அடுத்து மொத்த வசூலிலும் இப்படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.