பேட் கேர்ள் டீசருக்கு தொடரும் கண்டனம்: படத்தை தடை செய்யுமாறு புகார் | ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! | சூர்யா 45வது படத்தில் வில்லன் வேடத்தில் மன்சூர் அலிகான்! | எஸ்.எஸ்.ராஜமவுலி, மகேஷ் பாபு படத்திற்காக பிரியங்கா சோப்ராவின் சம்பளம் எவ்வளவு? | நாளை வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு! | அஜித்குமார் உடல் எடையை குறைத்தது எப்படி! - சீக்ரெட்டை வெளியிட்ட ஆரவ் | திரைக்கு வந்து ஒன்பது நாட்களில் 13 கோடிக்கு மேல் வசூலித்த குடும்பஸ்தன்! |
காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன் நிறுவனம், தற்போது 'திருக்குறள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படம் திருக்குறளின் பின்னணியில் திருவள்ளுவரின் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்
இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறும்போது “அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்த இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அத்துடன் இப்படத்திற்காக, சங்க இலக்கியச் சொற்களோடு, கவித்துவமும், பொருட்செறிவும் மிக்க இரு பாடல்களையும் எழுதியுள்ளார்” என்றார்.