புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
பெஞ்சல் புயலால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. வரலாறு காணாத மழையால் இந்த மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் அதன் பாதிப்பால் தத்தளித்து வருகின்றன. மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மற்றொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெஞ்சல் புயலால் வட தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல் ஆளாக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இவரைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் நிவாரண நிதி வழங்குவார்கள் என தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் சென்னை, பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வெள்ளம் பாதித்த மக்களை வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார்.