பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

நடிகை சமந்தா தற்போது இரண்டு விதமான வருத்தத்தில் இருப்பார். அவரது அப்பா கடந்த வாரம் காலமானது முதல் வருத்தம். அவரது முன்னாள் கணவர் நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் இன்று நடக்க இருப்பது இரண்டாவது வருத்தம்.
சில மணி நேரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ஒரு சிறுவனும், சிறுமியும் மல்யுத்த சண்டை போடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “ஒரு பெண் போல சண்டை செய்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பா மறைவுக்குப் பின் சமூக வலைத்தளப் பக்கம் ஒரு சிறு இடைவெளி விட்டிருந்தார் சமந்தா. இன்று அவர் பதிவிட்டுள்ள இந்தப் பதிவு யாருக்காக இருக்கும் என்பது ரசிகர்களுக்கும் நிச்சயம் புரியும்.
இன்று இரவு ஐதராபாத்தில் நடைபெற உள்ள நாக சைதன்யா, சோபிதா துலிபலா திருமணத்தில் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள், தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.