இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நாகசைதன்யா - சமந்தா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், நான்கு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். அதையடுத்து நாகசைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் சமந்தா என்ற பெயரில் சோபிதாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த ஒரு பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த பதிவை பார்த்துவிட்டு நடிகை சமந்தாதான் இந்த வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து கூறி வந்தார்கள். ஆனால் தற்போது அந்த பதிவை வெளியிட்டவர் சோபிதா துலிபாலாவின் தங்கையான டாக்டர் சமந்தா என்பது தெரிய வந்துள்ளது.
இப்படி ஒரு தகவல் வெளியானதை அடுத்து, அப்படி என்றால் இனிமேல் தனது மச்சினிச்சியை பெயர் சொல்லி அழைக்கும் ஒவ்வொரு நேரமும் நாகசைதன்யாவுக்கு முன்னாள் மனைவி சமந்தா ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருப்பார் என்று கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.