என் அரசியல் பார்வையை பாராட்டிய கமல்! - ஜி.வி. பிரகாஷ் | விஜய்யின் ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? | ‛ரெட்ரோ' படத்தில் சூர்யா - ஸ்ரேயா நடன பாடல் காதலர் தினத்தில் ரிலீஸ்! | நானியுடன் மூன்றாவது முறையாக இணைந்த அனிருத்! | நீ லெஸ்பியனா? ஜாக்குலின் அதிரடி பதில் | பேட் கேர்ள் டீசருக்கு தொடரும் கண்டனம்: படத்தை தடை செய்யுமாறு புகார் | ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! |
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். அவருக்கும் அவருடைய நீண்ட நாள் நண்பர் ஒருவருக்கும் திருமணம் என்று ஓரிரு வாரங்களாக செய்திகள் வெளிவந்தன. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளத்தில் “15 வருடங்களாக…,” என்று காதலருடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். அதற்கடுத்து திருப்பதி சென்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து முடித்த பின், கோவாவில் தனது திருமணம் நடக்க உள்ளதாக பேட்டி அளித்தார்.
இம்மாதம் டிச., 11 மற்றும் 12ல் கீர்த்தி சுரேஷ் அவரது காதலர் ஆண்டனி தட்டில் ஆகியோரது திருமணம் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. கீர்த்தி இந்து மதத்தைச் சேர்ந்தவர், ஆண்டனி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். அதனால், அவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கோவாவில் 'டெஸ்டினேஷன் வெட்டிங்' ஆக மூன்று நாட்கள் நடைபெற உள்ளது என்கிறார்கள்.
அவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும், திரையுலகத்தைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.