ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா |
சரித்திரப் படங்கள் என்பது தமிழ் சினிமாவுக்கு புதியதல்ல. 'பாகுபலி' படம் வந்த பிறகுதான் தமிழ் சினிமாவிலும் சரித்திரப் படங்கள் எடுக்க ஆரம்பித்தார்கள் என்பதெல்லாம் வேண்டுமென்றே சொல்லப்படுபவை.
வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006)', கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன் (2010)', பிரசாந்த் நடித்த 'பொன்னர் சங்கர் (2011)' ஆகிய படங்கள் அதற்கு முன்னதாகவே வெளிவந்தவை. 'பாகுபலி' தந்த பிரபலமும், வசூலும் அந்தப் படங்களுக்கு அமையவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இருந்தாலும் கடந்த சில வருடங்களில் சில சரித்திரப் படங்கள் கொஞ்சம் பேன்டஸியும் கலந்த படங்களாக தமிழில் வெளிவந்தன. ஆனால், அவை பெரிய வெற்றிப் படங்களாக அமையாமல் போனது வருத்தம்தான். ஒருவேளை இப்போது ரசிக்கப்படவில்லை என்றாலும் சிலபல வருடங்கள் கழித்து பேசப்படலாம்.
அப்படி ஒரு படமாக அமைந்த படம்தான் கார்த்தி நடித்து 2010ல் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம். செல்வராகவன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் கார்த்தியுடன், பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்தனர். படம் வெளிவந்த போது வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், இப்போதும் பேசப்பட்டு வருகிறது. அதன் இரண்டாம் பாகத்தை எப்போது எடுக்கப் போகிறீர்கள் என இயக்குனர் செல்வராகவனிடம் அவ்வப்போது ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள். கார்த்தியின் இரண்டாவது படமாக வந்தது. அப்போதைக்கு அவருக்கு இப்படம் தோல்வியைத் தந்தது என்றாலும் இப்போதும் பேசப்பட்டு வருகிறது. ஆரம்ப சறுக்கலிலும் ஒரு சமரசம்.
வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தைக் கொடுத்து பெரும் வரவேற்பையும், வசூலையும் பெறக் காரணமாக இருந்தவர் அப்படத்தை இயக்கிய சிம்பு தேவன். விஜய், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடிக்க 'புலி' படத்தை பேன்டஸி சரித்திரப் படமாக எடுத்தார். குழந்தைகளை ஓரளவிற்குக் கவர்ந்த படம் விஜய் ரசிகர்களையும் கூட கவராமல் போய்விட்டது. இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி கதை எழுதியிருந்தால் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கலாம்.
மசாலாப் படங்களை இயக்கிய சிவா, தமிழில் முதன் முறையாக இயக்கிய சரித்திரப் படம் 'கங்குவா'. வெளியீட்டிற்கு முன்பாக இந்தப் படம் பற்றி 'ஓவர் ஹைப்' ஏற்றினார்கள். முதல் முறையாக ஒரு சரித்திரக் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்த படம். 'பாகுபலி 2' வசூலை எல்லாம் இந்தப் படம் மிஞ்சும் என்றும் பில்டப் தந்தார்கள். ஆனால், சராசரி ரசிகர்களைக் கூட இந்தப் படம் கவரவில்லை என்பதே உண்மை. இப்படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் உள்ள குறைகளை நீக்கி இரண்டாம் பாகத்தை எடுத்தால் (?) நல்லது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பு, இரண்டாம் பாகத்திற்குக் கிடைக்காதது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.
தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் வெளிவந்த சரித்திரப் படங்கள் நமது ஹீரோக்களுக்கு பெரும் வெற்றியைக் கொடுத்த படங்களாக இருந்தன. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரது சில படங்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ரஜினி, கமல் காலத்திலும், அதிகமான சரித்திரப் படங்கள் வந்ததில்லை. ஆனால், கடந்த சில வருடங்களில் பான் இந்தியா அந்தஸ்துக்காக சில ஹீரோக்கள் இப்படி சரித்திரப் படங்களைத் தொட்டு சறுக்கியதுதான் மிச்சம். இன்னும் சில வருடங்களுக்கு யாரும் சரித்திரப் படங்கள் பக்கம் செல்ல மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.