ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா |
நடிகைகளே பொறாமைப்படும் அளவுக்கு தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் கவர்ந்தவர் சில்க் ஸ்மிதா. சினிமாவில் ஒப்பற்ற கனவுக்கன்னியாக வலம் வந்த இவர் ஆந்திராவிலுள்ள ஏலூரு என்ற ஊரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். இன்று அவரின் 61வது பிறந்தநாளாகும்.
உறவினர் வீட்டு வேலைக்காரியாக தனது சென்னை வாழ்க்கையை தொடங்கி, சினிமாவுக்குள் நுழைந்து பல கோடி நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா. ஏழ்மையின் காரணத்தால் இவருடைய பள்ளிக் கல்வி நான்காம் வகுப்போடு நின்று விட, குடும்பத்தினர் இவருக்கு சிறுவயதிலேயே திருமணமும் முடித்து வைத்தனர். திருமண வாழ்க்கையும் இவருக்கு பெரிதாக மகிழ்ச்சியை தரவில்லை. வேலை தேடி சென்னைக்கு வந்த இவர் திரைப்படத் துறையில் ஒப்பனையாளராக தனது முதல் பணியை ஆரம்பித்தார்.
மறைந்த நடிகர் வினுசக்கரவர்த்தியின் உதவியால் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த "வண்டிச்சக்கரம்" என்ற திரைப்படத்தில் சாராயம் விற்கும் சில்க் என்ற பெண் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். ஏற்று நடித்த முதல் கதாபாத்திரமே இவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. அதிலிருந்து விஜயலட்சுமி என்ற இவரது இயற்பெயர் சில்க் ஸ்மிதா என மாறியது. இதனைத் தொடர்ந்து இவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும்; கவர்ச்சி கதாபாத்திரங்களாகவே அமைந்தது. இவருடைய கவர்ச்சியான தோற்றம், நடன அசைவு, கிரங்க வைக்கும் காந்த கண்கள் என தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் கனவுக்கன்னியாக வலம் வரச் செய்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 450க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
சினிமாவில் ஒப்பற்ற கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கையில் நிறைய துன்பங்களும், ஏமாற்றமும் மட்டுமே அதிகம் இருந்தது. 1996ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று தனது வீட்டில் தூக்கிட்டு இறந்து போனார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றளவும் பேசப்படுகிறது. இவரின் திரை வாழ்க்கையை சினிமாவாக எடுத்து பலர் கல்லாக்கட்டினர். அவர் மறைந்து 28 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் அவருக்கான இடம் மட்டும் சினிமாவில் இப்போதும் வெற்றிடமே...!