ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ஒரு காலத்தில் இந்தியாவில் மாந்த்ரீகவாதிகள் சிறப்புற்று விளங்கினார்கள். மன்னர்களின் அரசவையில் அவர்கள் முக்கிய இடம் வகித்தார்கள். அரசியலை தீர்மானிப்பவர்களாகவும் இருந்தார்கள். இப்படி சக்தி மிக்க இவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான படம்தான் 'மாயா மச்சீந்திரா'.
இந்த படம் 1931ம் ஆண்டே ஹிந்தி மற்றும் மாராட்டிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. 1939ம் ஆண்டுதான் தமிழில் தயாரிக்கப்பட்டது. ராஜா சந்திரசேகர் இயக்கினார். மச்சீந்திராவாக எம்.கே.ராதா நடித்தார். அவரது ஜோடியாக எம்.பி.ராதாபாய் நடித்தார். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் எம்.ஜி.சக்ரபாணி உள்ளிட்ட பலர் நடித்தார்கள். பாபநாசம் சிவன் இசை அமைத்தார்.
இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையான வில்லன் கதாபாத்திரம் 'சூரிய கேது'. அந்த வில்லனுக்கு சகோதரராக எம்ஜிஆர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஓரிரு காட்சிகளில் வந்து பின்னர் கொல்லப்பட்டு விடுவதான கேரக்டர். வில்லன் சூரிய கேதுவாக நடராஜ பிள்ளை என்பவர் நடிப்பதாக இருந்தது.
படக் குழுவினர் படப்பிடிப்புக்காக மும்பை சென்றபோது உடல்நலக்குறைவால் நடராஜ பிள்ளையால் வரமுடியவில்லை. உடல் நலம் சரியாகி வந்து விடுவார் என்று மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. ஆனால் நடராஜ பிள்ளை இறந்த செய்திதான் கிடைத்தது. இதனால் படத்தின் இயக்குனர் ராஜா சந்திரசேகர் எம்ஜிஆரை வில்லனாக நடிக்க வைத்தார். இந்த படத்தில் எம்ஜிஆரின் நடிப்பு பேசப்பட்டது. படமும் பெரிய வெற்றி பெற்றது.