விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா? | விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை |

சென்னை: இசையரசி எம்.எஸ். சுப்பு லட்சுமி பெயரில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான, 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்தது. இந்த விருதுடன் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான ரூ.1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது. மியூசிக் அகாடமியின் இந்த முடிவு, கர்நாடக இசை கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியது. எம்.எஸ்.சுப்பு லட்சுமியை மிக மோசமாக விமர்சித்தவருக்கு, எப்படி அவரது பெயரில் விருது வழங்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதை எதிர்த்து, சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று (நவ.,19) விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயசந்திரன், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயர் இல்லாமல் விருது வழங்கலாம் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.