சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

அஜித் நடித்த வீரம், வேதாளம், விஸ்வாசம் உட்பட பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார் யோகி பாபு. இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பின் போது அஜித்தை யோகி பாபு நெருங்கி நின்றதாகவும் அப்போது என்னை தொடாதீர்கள் என்று அவரைப் பார்த்து அஜித்குமார் சொன்னதாகவும் ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.
இப்படியான நிலையில் தற்போது மீண்டும் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் காமெடியனாக நடித்து வரும் யோகி பாபு, அப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்துடன் நெருக்கமாக நின்று தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதையடுத்து என்னை தொடாமல் நில்லுங்க என்று அஜித்குமார் சொன்னதாக கூறப்பட்ட செய்திக்கு இந்த புகைப்படம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.