ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
பாலா இயக்கி உள்ள வணங்கான் படத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பாலாவுக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மன நெகிழ்வுடனும், கனத்த இதயத்துடனும் என் இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து நேசித்து ஒரு நடிகனாக எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியவனுக்கு, தங்களின் இயக்கத்தில் பணியாற்ற வணங்கான் படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
நான் படப்பிடிப்பின் போது கூட இக்கதையின் பாதிப்பை முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடையச் செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில் வணங்கான் ஒரு மிக முக்கியமான படமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை. இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மக்கள் அனைவரும் இந்த படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உங்கள் அருண் விஜய் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு இயக்குனர் பாலாவுடன் தான் அமர்ந்திருக்கும் புகைப்படம் மற்றும் தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் அருண்விஜய்.