வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இந்தியன் பனோரமா என் அழைக்கப்பட்டும் சர்வதேச திரைப்பட விழா வருகிற 28ம் தேதி கோவாவில் தொடங்குகிறது. இந்த விழாவில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரையிடத் தேர்வாகி உள்ளது. தமிழில் தேர்வாகி உள்ள ஒரே படமும் இதுதான். இந்த நிலையில் மாதவன் நடித்து இன்னும் வெளிவராத 'ஹிஸாப் பராபர்' என்ற ஹிந்தி படம் வருகிற 26ம் தேதி சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட இருக்கிறது.
இப்படம் ஒரு கார்ப்பரேட் வங்கி ஒன்றின் மிகப்பெரிய மோசடி ஒன்றை ஒரு சாதாரண மனிதன் அம்பலப்படுத்துவது மாதிரியான கதை. இப்படத்தில் சாதாரண மனிதராக டிக்கெட் கலெக்டர் கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். தனது வங்கி கணக்கில் உள்ள குளறுபடியை கண்டுபிடிக்கும் மாதவன் அதை தொடரும்போது அதில் பெரிய மோசடி இருப்பதை கண்டுபிடிக்கிறார். அது எப்படி நிரூபிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை. இதில் கார்பரேட் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார். அஸ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.பி. சினிகார்ப் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
இப்படம் குறித்து மாதவன் கூறும்போது, “இந்தப் படம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. நீதி என்பது எளிதாக கிடைத்து விடாது என்பதையும் புரிந்து கொள்ள வைக்கும் படம். தார்மீக பொறுப்புணர்வை பற்றி பேசும் இந்தப் படத்தை இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் பார்க்கவிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.