நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல யூ டியூபரான டிடிஎப் வாசன் தனது மோட்டார் சைக்கிள் சாகச வீடியோக்களின் மூலம் லட்சக்கணக்கான பாலோயர்களை கொண்டிருப்பவர். யூ டியூப் பிரபலத்தை கொண்டு சினிமாவிலும் அறிமுகமானார். அவர் நடிப்பில் 'மஞ்சள்' வீரன் என்ற படம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பல்வேறு சிக்கல்களில் மாட்டி தற்போது அவரது டிரைவிங் லைசென்ஸ் கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் 'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து நீக்கப்பட்டு தற்போது அந்த படத்தில் கூல் சுரேஷ் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வாசன் 'ஐபிஎல்' (இந்தியன் பீனல் லா - இந்திய தண்டனை சட்டம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் உதவியாளர் கருணாகரன் இயக்குகிறார். இப்படத்தில் 'ஆடுகளம்' கிஷோர், அபிராமி, குஷிதா, சிங்கம்புலி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கருணாகரன் கூறும்போது “நாட்டில் நடைபெறும் திடுக்கிடும் சில குற்றங்களை நாம் செய்தித்தாள்களில் படித்து விட்டு சில தினங்களில் மறந்து விடுகிறோம். ஆனால் அந்த சம்பவங்களில் சிலவற்றின் பின்னால் வெளியில் தெரியாத அரசியல் காரணங்கள் உள்ளன. அதனால் சாதாரண அப்பாவி மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்யாத தவறுக்காக ஒரு குடும்பம் எப்படி அரசியல் சூழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியில் வருவதற்காக என்ன செய்கிறார்கள், அவர்களால் வெளியில் வர முடிந்ததா என்பதே படத்தின் கரு” என்றார்.