அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சூர்யா நடிப்பில் கடந்த 14ஆம் தேதி திரைக்கு வந்த கங்குவா படம் நெகட்டீவ் விமர்சனங்களை எதிர்கொண்டது. அதனால் அப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 10,000 தியேட்டர்களில் வெளியான இந்த படம் முதல் நாளில் 56 கோடி ரூபாய் வசூலித்தது. அதையடுத்து இரண்டாவது நாளில் 33 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் நேற்று மூன்றாவது நாளில் 15 கோடி ரூபாய் மட்டுமே கங்குவா படம் வசூலித்து இருக்கிறது.
இதன் மூலம் உலக அளவில் கங்குவா நூறு கோடி வசூலை கடந்து இருக்கிறது. என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் இன்னும் கடுமையாக குறைந்து ஒரு வாரம் கூட இந்த படம் தியேட்டர்களில் தாக்குப் பிடிப்பது கடினம் என்கிறார்கள். அதனால் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான சூர்யாவின் கங்குவா அவரது தோல்வி பட பட்டியலில் இடம் பெறப் போகிறது.