ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ரங்கூன் படத்தை அடுத்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த இந்த படம் இதுவரை 300 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காமெடி கலந்த காதல் மற்றும் குடும்ப கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயனை இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இந்த அமரன் படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியபோது பல காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் எடிட் செய்து முடித்த பிறகு தான் அது போன்ற காட்சிகளை இந்த படத்தில் வைத்தால் சிவகார்த்திகேயனின் மற்ற படங்கள் போல் ஆகிவிடும். அதனால் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை குறித்த கதை மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தோன்றியதால் அந்த காமெடி காட்சிகளை நீக்கிவிட்டேன். அப்படி நான் செய்ததினால் தான் முகுந்த் வரதராஜனின் பிரச்னைகள், அவரது குடும்பத்தாரின் துயரங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அந்த காமெடி காட்சிகளை நீக்கியதால்தான் சிவகார்த்திகேயனும் ஆக்சன் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். இல்லையென்றால் அவருடைய வழக்கமான படங்களில் இதுவும் ஒன்றாகதான் இருந்திருக்கும் என்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.




