கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் 'அமரன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். தீபாவளி வெளியீடாக இந்த படம் திரைக்கு வந்தது. தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. பெரும்பாலான படம் காஷ்மீரில் படமாகி இருந்தது.
படம் வெளியாகி 10 நாட்களுக்கு பிறகு இந்த படம் காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களைப் பற்றி தவறாக சித்தரிப்பதாகவும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதாகவும், அதனால் இந்த படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என்று இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ அறிவித்தது. இதையடுத்து படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.