தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! | இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! |
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'கங்குவா'. அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் வெளியாக உள்ளது.
இதனிடையே, இப்படத்தை வெளியிடத் தடை கோரி ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. தங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையான 55 கோடி ரூபாய் பணத்தை ஆகஸ்ட் மாதம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இன்னும் தரவில்லை. அதைத் தராமல் 'கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தரப்பில் இன்றைக்குள் அந்தத் தொகையைத் தந்துவிடுவதாக உத்தரவாதம் தரப்பட்டது. இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அந்தத் தொகையை செலுத்தி விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
எனவே, படம் வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை.
இதனிடையே கங்குவா படத்திற்கு தணிக்கை குழுவில் யு/ஏ சான்று கிடைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.