வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ் சினிமா உலகில் ஏழு மாதங்களுக்கு முன்பே, சுமார் 210 நாட்களுக்கு முன்பே ஒரு படத்தின் வெளியீட்டு அறிவிப்பை வெளியிடுகிறார்கள் என்பது ஆச்சரியமானதுதான். 'அப்போது வர வேண்டிய படத்திற்கு இப்போதே ஏன் இந்த அறிவிப்பு?' என பலரும் யோசிக்க ஆரம்பித்திருப்பார்கள்.
எங்களது தேதியை நாங்கள் அறிவித்துவிட்டோம். இது எங்கள் படத்தின் 'லைப்', உங்கள் படத்தின் 'லைப்' நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் எங்கள் வெளியீட்டிற்கேற்றபடி உங்கள் வெளியீட்டை வைத்துக் கொள்ளுங்கள் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
2025ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக ரஜினியின் 'கூலி', விஜய்யின் 69வது படம், அஜித்தின் 'விடாமுயற்சி, குட் பேக் அக்லி', விக்ரமின் 'வீர தீர சூரன்', சூர்யாவின் 44வது படம், கார்த்தியின் 'வா வாத்தியார்', தனுஷின் 'குபேரா, இட்லி கடை', சிவகார்த்திகேயனின் 23வது படம் உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம். இவற்றில் சில படங்கள் 2025 பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.
'தக் லைப்' படத்தின் வெளியீட்டை இப்போதே அறிவித்துள்ள நிலையில், அந்த வழியைப் பின்பற்றி மற்ற படக் குழுவினரும் தங்களது அறிவிப்பை இப்படி வெளியிட்டால் தேவையற்ற மோதல், சிக்கல்கள், தியேட்டர்கள் கிடைக்காமல் தவிப்பது ஆகியவை இருக்க வாய்ப்பில்லை.