சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ள 'கங்குவா' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா, நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் பான் இந்தியா படங்கள் இன்று அதிகமாக வருவதற்குக் காரணமான இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
“ஆந்திரா, தெலங்கானாவில் மட்டுமே இருந்த தெலுங்கு சினிமாவை, இங்கிருந்து வெளியே கொண்டு போக முக்கியக் காரணம் சூர்யா. 'கஜினி' படம் வெளிவந்த சமயம், சூர்யா இங்கு வந்து படத்தை புரமோஷன் பண்ணாரு. அதைப் பார்த்து நமது தெலுங்கு நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சூர்யா என்ன செய்தாரோ அதை நீங்களும் போய் மற்ற மொழிகளில் செய்யுங்கள் என்று ஆலோசனை சொல்லி இருக்கிறேன். சூர்யா, நீங்கதான் 'பாகுபலி'ங்கற பான் இந்தியா படத்தைப் பண்றதுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தீங்க,” என்றார் ராஜமவுலி. அப்போது எதிரில் மேடையின் கீழே அமர்ந்திருந்த சூர்யா எழுந்து சென்று இயக்குனர் ராஜமவுலியைக் கட்டிப்பிடித்து தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், “சூர்யாவுடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டி இருந்தது. ஆனால், அது நடக்காமல் போனதற்கு நான்தான் காரணம். 'கங்குவா' போன்ற படத்தை பலப்பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். அப்படியெல்லாம் படப்பிடிப்பு நடத்துவது சாதாரண விஷயமல்ல. மேக்கிங் வீடியோ பார்க்கும் போது அது எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்தது. சிவா மற்றும் 'கங்குவா' குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த மாதிரியான படங்களை தியேட்டர்களில் பார்க்கும் போது மட்டும்தான் அதை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும்,” எனப் பேசினார்.