வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'கங்குவா'. இப்படம் பெரும் பொருட்செலவில் தயாராகி பான் இந்தியா படமாக அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 99 கோடியே 22 லட்ச ரூபாயில் இன்னும் தர வேண்டிய 55 கோடியைத் திருப்பி வழங்காத காரணத்தால் 'கங்குவா' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அது மட்டுமல்ல 'தங்கலான்' படத்தை ஓடிடியில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் 18 கோடியைத் தந்துவிட்டார்கள். எனவே, 'தங்கலான்' படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு ஆட்சேபனை இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அதன் வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மீதமுள்ள தொகையை நாளை வழங்குகிறோம் எனக் கூறினார். இதையடுத்து நாளை வழக்கை தள்ளி வைத்துள்ளார் நீதிபதி. நாளை மதியத்திற்குள் பணம் வழங்கப்பட்டுவிட்டால் 'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதி திட்டமிட்டபடி வெளியாகும். இல்லையென்றால் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டி வரும்.