டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

கடந்த 2013ம் ஆண்டு 'மதயானைக்கூட்டம்' என்ற வெற்றி படத்தை தந்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். அதன் பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் போகவே, நீண்ட இடைவேளைக்கு பின்னர், 2023ம் ஆண்டு 'ராவணன் கோட்டம்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், விக்ரம் சுகுமாரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அதில், “மதயானைக் கூட்டம் திரைப்படம் இயக்கியதற்கு பிறகு எனக்கு வேறு பட வாய்ப்பு வரவில்லை. நானும் யாரும் அழைக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால், வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்து இருக்கிறான் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். அவன் வேறு யாரும் அல்ல அவனை நான்தான் நடிகன் ஆக்கினேன். பச்சை துரோகி... கைக்கூலியாக என் எதிரிக்கு செயல்பட்டிருக்கிறான். இதைக் கேட்டதிலிருந்து ஆண்டவன் மீதுதான் ஆத்திரம் வருகிறது. ஆத்திரம் பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை” எனக் கூறியுள்ளார்.
விக்ரம் சுகுமாரனின் இப்பதிவு பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் குறிப்பிடும் நடிகர் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொல்லாமல், அந்த பதிவை நீக்கினார். ஆனாலும் அந்த நடிகர் யார் என நெட்டிசன்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.