மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் | மீண்டும் புதிய படம் இயக்கும் கே.எஸ்.அதியமான் | 'பீனிக்ஸ், எமக்குத் தொழில் ரொமான்ஸ்' வெளியீடுகள் தள்ளிவைப்பு ஏன்? | ரகசியமாக 2வது திருமணம் செய்த இயக்குனர் கிரிஷ் | கங்குவாவுடன் மோதும் கிளாடியேட்டர் | மாளவிகா மேனனுக்கு 'போன் டார்ச்சர்' கொடுத்த இளைஞர் கைது | தமிழில் முதல் பான் இந்தியா வரவேற்பைப் பெறுமா 'கங்குவா' | பிளாஷ்பேக்: முதன் முதலில் காடுகளில் படமான 'வனராஜ கார்ஸன்' |
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரலாற்று பேண்டஸி படமாக உருவாகியுள்ள படம் 'கங்குவா'. பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். வரும் நவம்பர் 14ம் தேதி இந்த படம் பான் இந்தியா ரிலீசாக வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து மும்பை, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் பிரமாண்டமாக நடத்தினர். இந்த நிலையில் நேற்று கேரளாவில் கொச்சியில் உள்ள மிகப்பெரிய மால் ஒன்றில் ரசிகர்கள் முன்னிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
கேரளாவில் இளம் தமிழ் நடிகர்களை பொறுத்தவரை விஜய், அஜித்க்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட அதற்கு சமமாக சூர்யாவுக்கும் தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். கங்குவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெறும் செய்தியை கேட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த மாலின் உள்ளேயும் வெளியேயும் குவிந்தனர். அவர்கள் செய்த ஆரவாரத்தை கண்டு ரொம்பவே நெகிழ்ந்து போனார் சூர்யா. “இந்த அன்பை நான் எப்போதும் என் மனதில் பதிய வைத்திருப்பேன். உங்கள் அன்பு கடவுளுக்கு நிகரானது. அதே சமயம் உங்கள் பாதுகாப்பு முக்கியம்.. மேலே உள்ள கண்ணாடி தடுப்புகளின் அருகில் நிற்கும்போது கவனமாக இருங்கள்” என்று கூறினார்.
ரசிகர்களின் அன்பு கடவுளுக்கு சமமானது என சூர்யா கூறியதும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆரவாரம் எழுப்பினர். அதைக்கண்டு உணர்ச்சி வசப்பட்ட சூர்யா, மேடையில் அப்படியே முழந்தாலிட்டு கைகூப்பி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.