சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

உலக செஸ் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். அவரது வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. ஆனால் அதற்கு விஸ்வநாதன் அனுமதி அளிக்காமல் இருந்தார்.
தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், பாலிவுட் எழுத்தாளர் சஞ்சய் திரிபாதியும் இணைந்து எழுதியுள்ள திரைக்கதைக்கு ஆனந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். மஹாவீர் ஜெயின், ஆஷிஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த் கேரக்டரில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது. 52 வயதான தற்போதைய விஸ்வநாதன் ஆனந்த் தோற்றத்தில் மாதவன் நடிப்பார் என்று தெரிகிறது. தற்போது ஏ.எல்.விஜய் மாதவன், கங்கனா ரனவத் நடிக்கும் 'லைட்' என்ற படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாக்கி வருகிறார்.
மயிலாடுதுறையில் 1969 டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். 1988ல் இந்தியாவுக்கு முதல் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். 5 முறை உலக சாம்பியன், 2 முறை உலகக்கோப்பை செஸ் சாம்பியன் உள்பட பல்வேறு சாதனைகள் படைத்திருக்கும் அவர் மூலமாகவே இந்தியாவில் செஸ் போட்டி பிரபலமானது.