அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
2024 தீபாவளிக்கு 'அமரன், பிரதர், பிளடி பெக்கர்' ஆகிய தமிழ்ப் படங்களும், 'லக்கி பாஸ்கர்' என்ற டப்பிங் படமும் வெளிவந்தது. அதற்கு முன்பாகவும் வெளியான சில படங்கள் தீபாவளியைக் கடந்தும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
தீபாவளிக்கு வெளிவந்த மூன்று நேரடி தமிழ்ப் படங்களில் 'அமரன்' படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வரவேற்பும், வசூலும் கிடைத்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் இப்படம் சுமார் 150 கோடியை வசூலித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் கடந்த நான்கு நாட்களாகவே ஹவுஸ்புல்லாகவே ஓடியது என்று தகவல்.
'பிரதர், பிளடி பெக்கர்' ஆகிய படங்கள் 'அமரன்' படத்தின் ஓட்டத்திற்கு முன்னால், பின்னால் கூட ஓட முடியவில்லை. எங்கேயோ பின்தங்கிவிட்டார்கள். அதே சமயம் 'லக்கி பாஸ்கர்' படம் ஒரு பைனான்சியல் க்ரைம் பற்றிய சுவாரசியமான படமாக இருப்பதால் டப்பிங் படம் என்பதையும் மீறி ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கடந்த நான்கு நாட்களாக தீபாவளி விடுமுறை என்பதால், நல்ல வரவேற்பு பெற்ற படங்களைத் தவிர மற்ற படங்களுக்குமே ஓரளவுக்கு ரசிகர்கள் வந்திருப்பார்கள். ஆனால், இன்று திங்கள் கிழமை. இன்று முதல்தன் ரியல் டெஸ்ட் ஆரம்பம்.
அதனால், ஆன்லைன் முன்பதிவு தளங்களில் ஒரு பார்வை பார்த்தோம். 'அமரன்' படத்திற்குக் கூட சிங்கிள் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் நிறையவே இருக்கிறது. ஆனால் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 80 சதவீதம் வரையிலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியான முன்பதிவு நிறைவான ஒன்றுதான்.
அதே சமயம், 'பிரதர், பிளடி பெக்கர்' ஆகிய படங்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 10 சதவீதம் கூட ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படவில்லை. 'லக்கி பாஸ்கர்' படத்திற்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 50 சதவீதத்திற்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கிள் தியேட்டர்கள் காலியாகவே உள்ளன.
தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'வேட்டையன், லப்பர் பந்து' ஆகிய படங்கள் சென்னை உள்ளிட்ட சில மாநகரங்களில் ஒரு சில காட்சிகளாக இப்போதும் திரையிடப்பட்டு வருகின்றன. 'தி கோட், பிளாக், டிமான்டி காலனி 2' ஆகிய படங்கள் ஓரிரு காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
'சிங்கம் அகய்ன், பூல் புலையா 3' ஆகிய ஹிந்திப் படங்களுக்கு சென்னையில் கூட சுமார் 20 தியேட்டர்கள் வரையில் மூன்று, நான்கு காட்சிகள் வரை கிடைத்துள்ளன. 'வெனோம், த வைல்ட் ரோபோட்' உள்ளிட்ட சில ஆங்கிலப் படங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் 'அமரன்' படம் இந்த வார இறுதி வரையிலும் நன்றாகவே ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரத்தில் வார நாட்களில் தாக்குப் பிடித்தால் அதற்கடுத்த வார இறுதி வரையிலும் வசூலைப் பெறலாம். மற்ற தீபாவளி படங்கள் இந்த வார இறுதி வரை தாக்குப் பிடித்தாலே அதிசயம்தான்.
தமிழில் அடுத்த பெரிய வெளியீடாக நவம்பர் 14ம் தேதி சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படம் வருகிறது. அதுவரையில் இருக்கும் படங்களை வைத்துத்தான் தியேட்டர்களை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.