அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா சின்னத்திரையில் 'பூவே உனக்காக' சீரியல் மூலம் அறிமுகமானார். அதன்பின் 'அருவி' தொடரில் நடித்த அவருக்கு மக்கள் மத்தியில் பெயரும் புகழும் கிடைத்தது. இதனையடுத்து ஜோவிதா ஜீ தமிழில் நவம்பர் 4ம் தேதி ஒளிபரப்பாக உள்ள 'மெளனம் பேசியதே' தொடரிலும் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில், அவர் சினிமாவிலும் விரைவிலேயே அறிமுகமாக உள்ளார். ஜோவிதா அறிமுகமாகும் படத்திற்கு அவரது தந்தை லிவிங்ஸ்டன் தான் கதாசிரியராம். இதுகுறித்து மனம் திறந்துள்ள லிவிங்ஸ்டன், 'நாடகங்கள் தான் திரைப்படத்தின் முன்னோடி. அதனால் தான் எனது மகளை சீரியலில் நடிக்க வைத்து அனுபவம் பெற வைத்தேன். இப்போது அவர் தேறிவிட்டதால் சினிமாவில் களமிறக்குகிறேன்' என்று கூறியுள்ளார். மேலும், ஜோவிதா அறிமுகமாகும் படத்தின் கதையை மூன்று ஆண்டுகளாக உருவாக்கியதாகவும் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த படம் இருக்கும் எனவும் லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.