மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு | நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் | பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு |
ராமாயணம், அவற்றின் கிளை கதைகள் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. ஆனால் ராமர் பாலம் பற்றிய படங்கள் மிகவும் அரிது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த 'ராம்சேது' படம் ராமர் பாலம் கட்டப்பட்ட விதம் குறித்து கடலுக்குள் இருக்கும் குறிப்பை தேடும் கதையாக இருந்தது.
ராமாயணம் பல வடிவங்களில் திரைப்படமாகிக் கொண்டிருந்த காலத்தில் ராமர் பாலத்தை பற்றி வந்த படம் 'சேது பந்தனம்'. ராமர் பாலம் கட்டப்பட்ட விதம் குறித்து ராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதையே படமாக எடுத்திருந்தனர். சீதையை மீட்பதற்காக ராவணனுக்கு எதிராக ராமன் போர் புரிந்த கதையையும் இப்படம் விவரிக்கிறது.
பி.பி.ரங்காச்சாரி ராவணனாக நடித்தார். நாட் அன்னாஜி ராவ் ராமராக நடித்தார். எம்.எஸ்.மோகனாம்பாள் ராவணனின் மனைவி மண்டோதரியாக நடித்தார். ஆஞ்சநேயராக பார்த்தசாரதி நடித்தார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக இருந்ததாக சொல்வார்கள். ராவணனால் சீதை அடைத்து வைக்கப்பட்டிருந்த அசோக வனத்தில் சீதைக்கு காவலாக நிற்கும் பேய் வேடத்தில் கே.எஸ்.அங்கமுத்து நடித்தார். பத்மநாபன் இப்படத்தை இயக்கி, தயாரித்தார். எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார். சிதம்பரம் வைத்தியநாத சர்மா பாடல்கள் எழுதினார்.
அந்த காலகட்டங்களில், படங்களோடு நகைச்சுவை குறும்படங்களையும் இணைத்து வெளியிடுவது வழக்கம். இந்தப் படத்துடன் 'ஆசை' என்ற குறும்படத்தை இயக்கி இணைத்திருந்தார் ஆர்.பத்மநாபன். இக்குறும்படத்தில் டி.என்.கமலவேணி, புலியூர் துரைசாமி அய்யர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றியடைந்தது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் பற்றிய மேல் விபரங்களோ, திரைப்பட பிரதியோ இப்போது இல்லை.