வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் நடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது 'பீனிக்ஸ் வீழான்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து விடுதலை-2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் எனது தந்தை தினமும் 500 ரூபாய் தான் பாக்கெட் மணி கொடுக்கிறார். அது எனது செலவுக்கே போதவில்லை. அதனால் தான் சினிமாவில் நடிக்க வந்தேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது சூர்யா சேதுபதி அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகர் மகன் ஏன் நடிகராக வேண்டும்? வேறு தொழில் செய்யக்கூடாதா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம். போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம். ஆனால் நடிகர் மகன் மட்டும் ஏன் நடிகராக கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கும் சூர்யா சேதுபதி, நடிகரின் மகன் என்பதால் சான்ஸ் மட்டும்தான் கிடைக்கும். கடினமாக உழைத்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும். அதனால் பீனிக்ஸ் வீழான் படத்தில் கடினமான நடிப்பை கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.