தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன், நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்ட கை, ஊருக்கு உழைப்பவன் இந்த நான்கு படங்களையும் இயக்கியவர் மலையாள இயக்குனர் எம் கிருஷ்ணன் நாயர். இவை அனைத்துமே வெற்றி படங்கள்.
இது தவிர தலைப்பிரசவம், முத்துச்சிப்பி, ஆளுக்கொரு வீடு, மன்னிப்பு, மகனே நீ வாழ்க, குடும்பம் உட்பட மொத்தம் 18 தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 120 படங்களை இயக்கியுள்ளார். 1955ம் ஆண்டு மலையாளத்தில் 'சி.ஐ.டி' படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'காவியமேளா' என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
பிரபல இயக்குநர்கள் ஹரிஹரன், எஸ்.பி.முத்துராமன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பிரபல திரைப்பட இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றினார்கள். 2001ம் ஆண்டு 74வது வயதில் காலமானார்.