இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தென்னிந்திய அளவில் அனைத்து ரசிகர்களும் விரும்பக்கூடிய பாடகியாக வலம் வருகிறார். பெரும்பாலும் இவர் பாடிய பல பாடல்கள் ஹிட் பாடல்கள் ஆகி ரசிகர்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களாகவே அமைந்துள்ளன. சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் கலந்து கொண்ட லைவ் கான்சர்ட் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரேயா கோஷல் பாட துவங்கிய போது கேலரியில் அமர்ந்திருந்த ரிஷி மற்றும் மந்தாரா என்கிற காதல் ஜோடி எழுந்தனர். ஸ்ரேயா கோஷலிடம் உங்கள் முன்பாக என் காதலியிடம் காதலை சொல்லப் போகிறேன் என்று கூறினார் ரிஷி.
அவரை ஊக்கப்படுத்திய ஸ்ரேயா கோஷல், “ஆயிரக்கணக்கானோர் இங்கே கூடியிருக்கின்றனர். நீங்கள் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டால் அதை சரியாக செய்யுங்கள். உங்களுக்கு ஒரே ஒரு சான்ஸ் தான் இருக்கிறது” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து தனது காதலியின் முன் மண்டியிட்டு தனது காதலை அவர் வெளிப்படுத்த, அந்த சந்தோஷத்தில் அவரது காதலி மட்டுமல்ல அருகில் இருந்தோர் அனைவரும் சந்தோஷ கூச்சலிட்டனர். இது குறித்த சில வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.