ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த 2017ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த படம் 'துப்பறிவாளன்'. அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கப் போவதாக 2019ம் ஆண்டு அறிவித்தனர். இங்கிலாந்தில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்படம் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து தானே துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக கூறியிருந்தார் விஷால். அதன் படப்பிடிப்பு நடத்தப்படாமல் வெவ்வேறு படங்களில் அவர் நடித்து வந்தார். இந்நிலையில் துப்பறிவாளன்-2 திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் விஷால். தற்போது இதன் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்தில் துவங்க விஷால் திட்டமிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பை லண்டன், மலேசியா, அஜர்பைஜான் போன்ற நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.