5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் | தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி | 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகளை வழங்குங்கள்: தமிழக அரசுக்கு கோரிக்கை | கர்நாடகாவில் 'தக்லைப்' வெளியிட வர்த்தக சபை அனுமதிக்கணும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் | வெற்றி பயத்தில் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே | தக் லைப் விவகாரத்தால் கலக்கத்தில் ஜனநாயகன் | பிளாஷ்பேக்: சிவாஜி படத்திற்கு கதை எழுதி தயாரித்த என்.டி.ராமராவ் | சினிமா விழாக்களில் அரசியல்வாதிகள் : கோலிவுட்டில் புது டிரெண்ட் | பிளாஷ்பேக்: சென்னை மாகாணத்தை முதன் முதலில் 'தமிழ்நாடு' என்று அழைத்தது சினிமா | தீவிர முருக பக்தர் யோகிபாபு |
நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‛தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர கமல் தயாரிக்க, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக தயாராகி வந்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் பிரச்னையால் இந்தப்படம் துவங்க தாமதம் ஆகி உள்ளது. இதனால் மற்ற படங்களில் நடிக்க சிம்பு தயாராகி வருகிறார்.
இதற்கிடையே ‛ஓ மை கடவுளே' படத்தின் மூலம் பிரபலமான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தான் நடிப்பதாக எக்ஸ் தளத்தில் சிம்பு அறிவித்துள்ளார். அதன் உடன் கட்டம் கட்டி கலக்குறோம்... வின்டேஜ் எஸ்டிஆர் மூட் என குறிப்பிட்டு தனது பாதி முகம் தெரியும் அளவுக்கு கை விரலில் கட்டம் கட்டி இருப்பது போன்ற போட்டோவை பகிர்ந்துள்ளார்.
இரு தினங்களாக எக்ஸ் தளத்தில் சிம்பு, ‛‛Dum + Manmadhan + Vallavan + Vtv in Gen Z mode = NAMBA NEXT!!! என்றும், டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூடில் நாளைக்கு சார்ப்பா மாலை 6.06 மணிக்கு வரேன்'' என குறிப்பிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அஸ்வத் மாரிமுத்து தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ‛டிராகன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.