மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
ஒரு திரைப்படம் வெளியாகும்போது அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட, படத்திற்கு சம்பந்தமில்லாத பாடல்கள் இடம்பெறும் அல்லது மேக்கிங் இடம்பெறும். ஆனால் ஒரு படத்துடன் குறும்படம் ஒன்று 1936ம் ஆண்டே வெளியானது. கே.சுப்ரமணியம் இயக்கிய திரைப்படம் 'உஷா கல்யாணம்'. இது புராண கதையை அடிப்படையாக கொண்டது. பகாசுரன் என்ற அரக்கனின் மகன் அனிருத்தாவும், உஷாவும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். பகாசுரன் அவர்களின் காதலுக்கு சம்மதிக்கவில்லை அனிருத்தை சிறையில் அடைக்கிறான். பகாசுரனை வென்று அனிருத்தனை விடுவிக்கும் கிருஷ்ணரால் அனிருத்தன் காப்பாற்றப்படுகிறான். இறுதியில், கிருஷ்ணன் அனிருத், உஷா, திருமணத்தை நடத்தி வைப்பதுதான் கதை.
இதில் உஷாவாக எஸ்.டி.சுப்புலட்சுமி, அனிருத்தாவாக எம்.வி.கிருஷ்ணப்பா, பாராசுரனாக சி.வி.வி.பந்துலு, சித்ரவேகையாக எம்.எஸ்.பட்டம்மாள், கிருஷ்ணனாகவும், சங்கரநாராயணனாகவும் வி.கோவிந்தசாமி, நாரதராக ஜே.எம்.சுந்தரம், ருக்மணியாக எஸ்.எஸ்.பத்மாவதியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் மொத்தம் 33 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் மற்றும் சதாசிவதாஸ் எழுதியுள்ளனர்.
இந்த படத்துடன் 'கிழட்டு மாப்பிள்ளை' என்ற நகைச்சுவை குறும்படமும் வெளியானது. இதில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் நடித்திருந்தார்கள்.