300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தற்போது ஆன்லைன் மோசடிகள் பெரிய அளவில் கோடிக் கணக்கில் நடந்து வருகிறது. அவற்றில் ஒன்றாக 'எச்.பி.இசட் டோக்கன்' என்ற செல்போன் செயலி மூலம் நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் அதிக அளவில் முதலீடுகளை பெற்று மோசடி செய்யப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக நாகாலாந்து மாநிலத்தின் கோகிமா பகுதி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கடந்த மார்ச் மாதம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். 'எச்.பி.இசட் டோக்கன்' செல்போன் செயலி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா பங்கேற்றார். இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து அவர் பணம் பெற்றுள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அசாமின் கவுகாத்தியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நேற்று தமன்னா ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் தமன்னாவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
விசாரணையில் அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பணம் பெற்றதை ஒப்புக்கொண்ட தமன்னா அது மோசடி நிறுவனம் என்று அப்போது தனக்குத் தெரியாது என்றும், தேவைப்பட்டால் அந்த பணத்தை திருப்பி ஒப்படைப்பதாகவும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.