கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே நடிகை கவுதமிக்கு, 150 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக 3.16 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில் காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பனும், அவரது உதவியாளர் ரமேஷ் சங்கரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அழகப்பனின் உதவியாளர் ரமேஷ் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று ராமநாதபுரம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதமி நேரில் ஆஜரானார். ரமேஷ் சங்கர் இந்த மோசடியில் முக்கிய நபராக உள்ளதாலும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைத்து விடுவார் என்றும் கூறி ஜாமீன் வழங்கக்கூடாது என கவுதமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு நடந்த அநீதியை எதிர்த்து நியாயத்திற்காக போராடி வருகிறேன். எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். நியாயத்திற்காக என்னுடன் துணையாக நிற்கின்றனர். அதற்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என விசாரித்தபோது பல விஷயங்கள் நடந்திருப்பது எனது கவனத்திற்கு வந்தது. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.