ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் புராண படங்களும், புராண கதை மாந்தர்களை மையமாக கொண்ட படங்களும் வந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் நாட்டுபுற கதைகளில், செவி வழி கதைகளில் வந்த பல பக்திமான்கள், ஆன்மீக குருக்களை பற்றிய படங்களும் வந்தது. குறிப்பாக நந்தனார், பத்ராசல ராமதாஸ், மகாத்மா கபீர், அருணகிரிநாதர், சுந்தரமூர்த்திநாயனார், புரந்தரதாசர், துக்காராம், துளசிதாஸ், கண்ணப்பநாயனார், தாயுமானவர், சங்கராச்சாரியார் மற்றும் விப்ரநாராயணர் ஆகியோர் கதைகள் படமானது. அவற்றில் முக்கியமானது 'பட்டினத்தார்' கதை.
1935ம் ஆண்டு முதல் 'பட்டினத்தார்' படம் உருவானது. இதில் சி.எஸ்.சுந்தரமூர்த்தி நாயனார் பட்டினத்தாராக நடித்தார். இதே ஆண்டில் இன்னொரு 'பட்டினத்தார்' படமும் தயாரானது. இதில் பட்டினத்தாராக எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்தார். இரு படத்தில் யார் படத்தை முதலில் வெளியிடுவது என்ற போட்டி வந்தது. இதனால் சுந்தரமூர்த்தி நாயனார் நடித்த படத்தை தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையும் டைட்டிலில் சேர்த்து 'தாமரை பட்டினத்தார்' என்ற பெயரில் அவசர அவசரமாக வெளியானது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. சுந்தரமூர்த்தி நாயனாரின் கனத்த தோற்றம் பட்டினத்தார் கேரக்டருக்கு செட்டாகவில்லை என்பதாலும் தொழில்நுட்ப கோளாறாலும் படம் தோல்வி அடைந்ததாக சொல்வார்கள்.
அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1936ம் ஆண்டு தண்டபாணி தேசிகர் நடித்த பட்டினத்தார் படம் வெளிவந்தது. படம் 25 வாரங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இதனை டி.சி.வடிவேலு நாயக்கர் இயக்கி இருந்தார். வி.என்.சுந்தரம், டி.ஆர்.முத்துலட்சுமி, டி.கே.ருக்மணி உள்பட பலர் நடித்திருந்திருந்தார்கள். கோபால் சர்மா இசை அமைத்திருந்தார், வேல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இரண்டு படத்தின் பிரதிகளுமே இப்போது இல்லை.