படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

எவ்வளவுதான் சினிமா பிரபலமாக இருந்தாலும் கூட சில நேரங்களில் அவர்களுக்கு விமான பயணங்கள் கசப்பான அனுபவங்களை தந்து விடுகின்றன. சமீப காலங்களில் இண்டிகோ விமானத்தில் பயணிக்கும் பிரபலங்கள் தொடர்ந்து தாங்கள் சந்தித்து வரும் சிரமங்களையும் அந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கையும் பற்றி அவ்வப்போது கடுமையான கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வருடம் நடிகைகள் ஸ்வேதா மேனன், மாளவிகா மோகனன் ஆகியோர் இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது கசப்பான அனுபவங்களை சந்தித்ததாக கூறியிருந்தனர் இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் தற்போது இண்டிகோ விமான பயணத்தில் அப்படி ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் விமானப்பயணம் செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்து இருந்த ஸ்ருதிஹாசன் விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகியும் விமானம் வரவில்லை. இது குறித்து முறையான தகவலும் பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்தபடியே தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த பிரச்சனை குறித்து வெளிப்படுத்திய ஸ்ருதிஹாசன் குறைந்தபட்சம் என்ன நடக்கிறது என்பதை பயணிகளுக்கு முறையாக அறிவிக்கக்கூடவா முடியவில்லை என இண்டிகோ விமான நிறுவனத்தை விமர்சித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பதில் அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ள இண்டிகோ விமான நிறுவனம், உங்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியத்திற்காக வருந்துகிறோம். காலநிலை சரியில்லாத காரணத்தினால் மும்பையில் இருந்து புறப்பட்டு வந்து சேர வேண்டிய விமானத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளனர்.