இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு | சின்னத்திரையில் பார்த்திபன் |
ஒரு காலகட்டத்தில் இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் இருவரின் படங்களில் நடிக்க விரும்புவது போல இயக்குனர் ராம்கோபால் வர்மா டைரக்ஷனில் நடிக்கவும் பல தென்னிந்திய ஹீரோக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் கால சூழலில் அவரது சினிமா ஆர்வம் வேறு திசையில் சென்று விட்டாலும் தான் கூறும் விமர்சன கருத்துக்களாலும் சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடிய படங்களாலும் தொடர்ந்து பரபரப்பிலேயே தன்னை வைத்துக் கொண்டுள்ளார் ராம்கோபால் வர்மா. இந்த நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தானும் நடிகர் பஹத் பாசிலும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
உடனே ரசிகர்கள் இது குறித்து தங்களது பல்வேறு விதமான யூகங்களை பதிவிட துவங்கினர்.. குறிப்பாக அடுத்ததாக ராம் கோபால் வர்மா படத்தில் பஹத் பாசில் நடிக்க இருக்கிறார் என வழக்கம் போல கூற ஆரம்பித்தனர். ஆனால் தற்போது இந்த சந்திப்பு பின்னணி பற்றி கூறியுள்ள வர்மா, ஐதராபாத்தில் உள்ள டென் என்கிற தனது அலுவலகத்திற்கு பஹத் பாசில் தன்னை நேரில் வந்து சந்தித்தபோது எடுத்த படம் தான். இது எந்த ஒரு படப்பிடிப்புக்காகவும் அல்ல என்றும் கூறியுள்ளார்.
தற்போது தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் பஹத் பாசில் அங்கிருந்தபடியே ராம்கோபால் வர்மாவை நேரில் சென்று சந்தித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.