இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாகியுள்ளனர். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகுவதால் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் பிஸ்னஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் கேரளா மாநிலத்தின் தியேட்டர் உரிமையை பிரபல விநியோக நிறுவனம் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். இவ்வருடத்தில் மட்டும் இந்நிறுவனம் தி கோட், ராயன், தங்கலான், வேட்டையன், கேப்டன் மில்லர் என பெரும்பாலான தமிழ் படங்களின் கேரளா தியேட்டர் உரிமையை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.