பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய தன்னுடைய 44வது படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது அப்படத்துக்காக லொகேஷன் பார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. அது குறித்த வீடியோவையும் அவர் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது.




