கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
ஆளும் மத்திய பா.ஜ., அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். சமீபகாலமாக லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர், நடிகர் பவன் கல்யாண் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் பா.ஜ.வை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோருடன் இருக்கும் போட்டோவையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அந்த போட்டோவை மேற்கொள் காட்டி ‛எனிமி, மார்க் ஆண்டனி' போன்ற படங்களை தயாரித்த வினோத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு : ‛‛உங்களுடன் அமர்ந்திருக்கும் மூன்று பேரும் தேர்தலில் ஜெயித்தவர்கள். ஆனால் நீங்கள் டெபாசிட் இழந்தவர், அதுதான் வித்தியாசம். என்னுடைய படத்தின் ஷூட்டிங்கின் போது உங்களால் ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டீர்கள். இதுபற்றி கேட்டதற்கு போனில் பேசுவதாக சொன்னீர்கள், ஆனால் பேசவில்லை. இந்த சம்பவம் 2024, செப்., 30ல் நடந்தது. அன்றைய தினம் 1000 துணை நடிகர்கள் இருந்தார்கள். 4 நாட்கள் உங்களுக்கு படப்பிடிப்பு இருந்தது. ஆனால் வேறு ஒரு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததால் நீங்கள் சென்றுவிட்டீர்கள். அதனால் அன்றைய தினம் படப்பிடிப்பு நின்றதோடு எனக்கு பெரும் நஷ்டமும் ஏற்பட்டது'' என தெரிவித்துள்ளார்.