‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
சமீபத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் திரைப்படம் வெளியானது. பிரேம்குமாரின் முந்தைய படமான '96', இளைஞர்கள் மத்தியில் ஒரு காதல் அலையை உருவாக்கியது என்றால் இந்த மெய்யழகன் திரைப்படம் உறவுகளை தேட வேண்டும், அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தும் விதமாக வெளியாகி உள்ளது.
படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் என்றாலும், படம் அனைவரும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது என ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று அனைவரும் பாராட்டுகின்றனர். அதே சமயம் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தான் முதலில் ஒளிப்பதிவு செய்ய இருந்தார் என்கிற தகவலை தற்போது படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் வெளியிட்டுள்ளார்.
இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக 15 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இதன் சக்சஸ் மீட்டை நன்றி தெரிவிக்கும் சந்திப்பாக படக்குழுவினர் நடத்தினர். இந்த நிகழ்வில் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பேசும்போது, “இந்த படத்தில் முதலில் பி.சி ஸ்ரீராமை தான் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்தோம். அவரும் ஸ்கிரிப்ட் படித்துவிட்டு பல இடங்களில் கண்கலங்கினார். அடுத்ததாக படத்திற்கு என்னவெல்லாம் செய்யலாம் என ரொம்பவே ஆர்வமாகி வேலைகளிலும் இறங்கினார். ஆனால் திடீரென அவரது உடல்நிலை காரணமாக இந்த படத்தில் அவரால் பணியாற்ற முடியவில்லை. இப்போது அவரே இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவை மிகவும் பாராட்டுவார்” என்று கூறியுள்ளார்.